Wednesday, July 9, 2014



இரயில் சிநேகம் 

திரு. மோடி அவர்கள் பிரதமரான பிறகு, முதன் முதலாக அவரது தலைமையில் இரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய இரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா.
  • பட்ஜெட்டின் சிறப்பு அம்சமாக, தமிழகத்திற்கு ஐந்து புதிய இரயில்களும், முன்பதிவு இல்லாத டிக்கெட்டையும் இணையதளம் மூலம் பெறுவதற்கும், அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதும், தனியார் துறையை பயன்படுத்தி இந்தியன் இரயில்வேயை நவீனமாக்குதலும் மற்றும் சுமார் அறுபது ஆண்டுகள் விடுதலை வரலாற்றில் முதல் முறையாக புல்லட் இரயிலை அறிமுகப்படுத்துதல் என்றும் பலவகையான பல்நோக்கு திட்டங்களோடு இரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இரயில்வே  அமைச்சர் சதானந்தா கவுடா.
  • மத்திய இரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தாக்கல் செய்த இரயில்வே பட்ஜெட்டை பற்றி திரு.மோடி அவர்கள் தெரிவித்த கருத்துக்கள், எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் இது என்றும், மேலும் இது சாதாரண மனிதர்களுக்கான பட்ஜெட் என்றும், இது சிறப்பான சேவை, வேகம், பாதுகாப்பு ஆகியவற்றின் மீதான ஆவலைப் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இரயில்வே இலாகாவை நவீனப்படுத்தும் முயற்சிக்கான பங்களிப்பை தருவதுடன் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு உதவுவதாகவும் உள்ளது.
  • இரயில்வே பட்ஜெட் இந்தியாவை வளர்ச்சி பயணத்தில் இரயில்வே துறைக்கு முக்கிய பங்கு இருப்பதை காட்டுவதாக அமைந்து இருக்கிறது. மேலும் இது நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நாம் இரயில்வே இலாகாவை எங்கே எடுத்து செல்ல விரும்புகிறோம் என்பதையும் இரயில்வே இலாகவின் வாயிலாக இந்தியாவை எங்கே கொண்டு செல்ல விரும்புகிறோம் என்பதையும் ஒரு சேர வெளிப்படுத்துவதாக இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் மத்திய இரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா என்று கூறினார்.
  • மேலும் இந்த பட்ஜெட்டிற்கு சமமான முறையில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது.

இன்னும் தொடரும்…….



Sunday, June 8, 2014

பிரதமர் மோடியின் முதல் நாள்.

நாட்டின் 15 வது பிரதமராக பதவியேற்றுக்கொண்ட நரேந்திர மோதியின் முதல் நாள் நிகழ்ச்சிகள் உங்கள் பார்வைக்கு,

காலை 9: மணிக்கு பிரதமர் அலுவலகத்துக்கு வந்த நரேந்திர மோடிக்கு பிரதமர் அலுவலக ஊழியர்கள் மலர்க் கொத்து வழங்கி வரவேற்றனர்.

காலை 9.03: மோடி அவரது அலுவலகத்துக்குள் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.காலை 9.05: நாட்டின் 15வது பிரதமராக மோடி பொறுப்பேற்றுக் கொண்டார் தன்னுடன் பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டார்.
காலை 9.39: பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட சார்க் நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாவுடன் ஐதராபாத் இல்லத்துக்கு மோடி வந்தார்.
காலை 9.40: ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாயை சந்தித்து பேசினார்.
காலை 9.52: நாட்டின் முதல் பிரதமர் நேருவின் 50 வது நினைவு தினம் நேற்று என்பதால் நேருவுக்கு அஞ்சலி செலுத்தியதாக மோடி அவரது டுவிட்டரில் எழுதினார்.
காலை 10.11: மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை மோடி சந்தித்து பேசினார்.
காலை 10.27: நேற்று முன்தினம் நடந்த கோரக்தாம் ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.
காலை 10.38: இலங்கை அதிபர் ராஜபக்சை சந்தித்து பேசினார்.
காலை 11.18: பூடான் பிரதமர் லியான்சென் ஷெரிங்கை சந்தித்து பேசினார். மதியம் 12.09: நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவை சந்தித்தார்.
மதியம் 12.51: நரேந்திர மோடி – பாக் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு தொடங்கியது.
மதியம் 1.37: மோடி – நவாஸ் சந்திப்பு நிறைவடைந்தது.
மதியம் 1.42: வங்கதேச சபாநாயகர் ஷிரின் ஷரிப் சவுத்ரியுடன் சந்திப்பு
மதியம் 1.50: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சந்திப்புமாலை 5.30: மோடி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம், பார்லிமெண்ட் வளாகத்தின் சவுத் பிளாக்கில் தொடங்கியது.


இன்னும் தொடரும்-------

Sunday, June 1, 2014



சொன்னதை செய்தார் மோடி, வந்தார், வெந்தார்
30 ஆண்டுகளுக்கு பின் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது பா.ஜ.க.
வடக்கு, மேற்கு, மத்திய மாநிலங்களில் பாஜ.க.அலை,

திறமையான நிர்வாகத்தால் வலிமையான இந்தியாவை உருவாக்கி தருவதாக வாக்குறுதி கொடுத்து தேர்தலை சந்தித்தது பா.ஜ.க-வின்  நரேந்திர மோடி ஆட்சி, அந்த நம்பிக்கை வீணாகவில்லை. மோடியின் கடின உழைப்பாலும், அயராத பிரச்சாரத்தாலும் 30 ஆண்டுகளுக்கு பின் தனி மெஜாரிட்டியுடன்  ஆட்சியை பிடித்தது பா.ஜ.க. கூட்டணி.
நாடு முழுவதும் 543 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. நாட்டின் வடகோடியான லடாக் முதல் தென் கோடியான கன்னியாகுமரி வரை , மேற்கில் குஜராத் முதல் கிழக்கில் அருணாச்சலம் வரை பா.ஜ.க.கூட்டணியின் வெற்றி பரந்திருந்தது. குஜராத்தில் 26 இடங்களிலும், ராஜஸ்தானில் 25 இடங்களிலும், இமாச்சலில் 4 இடங்களிலும், உத்தரகாண்டில் 5 இடங்களிலும்,  கோவாவில் 2 இடங்களிலும், டெல்லியில் 7 இடங்களிலும், உத்திர பிரேதசத்தில் 71 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 41 இடங்களிலும், பீகாரில் 29 இடங்களிலும், ஆந்திராவில் 19 இடங்களிலும், மத்திய பிரேதசத்தில் 27 இடங்களிலும், கர்நாடகாவில் 17 இடங்களிலும், ஜார்கண்டில் 13 இடங்களிலும், சட்டீஸ்கரில் 9 இடங்களிலும், அரியானாவில் 7 இடங்களிலும், அசாமில் 7 இடங்களிலும், மற்றும் பிற இடங்களில் கனிசமான இடங்களில் பா.ஜ.க.கூட்டணி  வெற்றிபெற்றது.
மொத்தம் 543 லோக்சபா தொகுதிகளில் 282 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. 1984ம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக ஒரு கட்சி தனிப் பெருன்பான்மையுடன் அரசு அமைப்பது இதுவே முதல் முறை.  
   
இன்னும் தொடரும்.....